வயிற்றில் வைரஸால் ஏற்படும் ஒரு வித தொற்றால் பேதி, நீர்ச்சுருக்கு, ஜுரம், வயிற்றுப் பிடிப்பு, குமட்டல், வாந்தி, ஒரு வித அசாதாரண உணர்வு போன்றவை ஏற்பட்டால் அது Viral Gastroenteritis அல்லது Stomach flu (வயிற்று ஃப்ளு காய்ச்சல்) என்று கூறப்படுகிறது. நீர் மற்றும் உணவில் ஏற்படும் கலப்பினால் இது ஏற்படுகிறது. இந்த நோய் ஒரு வித தொற்று நோயும் கூட. ஒருவர் ஆரோக்கியமாக இருந்து அவரது நோயெதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் இந்த கிருமிகளால் எந்த பாதிப்பையும் உண்டாக்க முடியாது.
ஆனால் ஒருவருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இயல்பாகவே குழந்தைகளுக்கும், வயதான பெரியவர்களுக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். அவர்களையே இது அதிகம் பாதிக்கிறது. ஒருவர் இரண்டு நாட்களுக்கும் மேல் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாலோ, வாந்தியில் ரத்தத் துளிகளை பார்த்தாலோ, மோசமாக நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டாலோ, ஜுரம் இறங்கவே இல்லை என்றாலோ உடனே மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. இப்படி ஏற்படும் அறிகுறிகள் அவசர சிகிச்சை தேவை என்பதையே உணர்த்துகின்றன. ஆகவே அலட்சியம் வேண்டாம்.
Call us at (91) 9952002927to book an appointment with us at Springfield Wellness Centre for the best gastro surgery in Chennai.
For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
No comments:
Post a Comment